'கன்னட சூப்பர்ஸ்டார்' கிச்சா சுதீப் பாஜகவில் இணையலாம் என தகவல்..!

'கன்னட சூப்பர்ஸ்டார்' கிச்சா சுதீப் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
'கன்னட சூப்பர்ஸ்டார்' கிச்சா சுதீப் பாஜகவில் இணையலாம் என தகவல்..!
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ஆட்சியைத் தக்கவைப்பதற்காக பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் வரிந்து கட்டுகின்றன.

இந்த நிலையில், பிரபல கன்னட நடிகரான கிச்சா சுதீப் ,பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சுதீப் மட்டுமின்றி இன்னும் பல பிரபலங்களை தங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பாஜக சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் தனக்கு அரசியல் அழைப்புகள் வருவதாக நடிகர் சுதீப் தெரிவித்திருந்த நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபலங்கள் அவரை சந்தித்து பேசியிருந்தது பெரிதளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com