சாவர்க்கர் கருணை மனுக்களை அனுப்பியது உண்மைதான் - சத்யாகி சாவர்க்கர்

சாவர்க்கர் பசுவை ஒருபோதும் ‘கடவுளாக வழிபடவில்லை; அதை ஒரு 'பயனுள்ள விலங்கு' என்று மட்டுமே கருதினார்
சாவர்க்கர் கருணை மனுக்களை அனுப்பியது உண்மைதான் - சத்யாகி சாவர்க்கர்
Published on

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2023 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது விநாயக் தாமோதர் சாவர்க்கர் பற்றி சில கருத்துகளை வெளியிட்டார். ராகுலின் பேச்சு அவதூறு பரப்பும் வகையில் உள்ளதாக சாவர்க்கரின் கொள்ளுப்பேரன், சத்யாகி சாவர்க்கர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு புனேவில் உள்ள ஒரு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் சாவர்க்கரின் கொள்ளுப்பேரன் சத்யாகி சாவர்க்கர ஆஜர் ஆனார். அவரிடம் ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர் மிலிந்த் பவார் குறுக்கு விசாரணை நடத்தினார். அதற்கு பதிலளித்த, சத்யகி சவர்க்கர், “அந்தமான் சிறையில் இருந்தபோது சாவர்க்கர் ஐந்து முறை மன்னிப்பு கடிதங்களை எழுதினார் என்பது உண்மைதான்.

சாவர்க்கர் மட்டுமல்ல, பல அரசியல் கைதிகளும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு இதேபோன்ற மனுக்களை அனுப்பியுள்ளனர். சாவர்க்கர் பசுவை ஒருபோதும் ‘கடவுளாக வழிபடவில்லை; அதை ஒரு 'பயனுள்ள விலங்கு' என்று மட்டுமே கருதினார்; சாவர்க்கரின் முழுமையான எழுத்துக்களை வாசிக்காதவர்களே இத்தகைய விவாதங்களைக் கிளப்புகிறார்கள்” என்று கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com