

தானே,
நவிமும்பை பன்வெல் அருகே உள்ள நந்த்காவ் அரசு அங்கன்வாடி மையத்தில் 2 வயது சிறுமியை பெண் ஒருவர் காலால் எட்டி உதைத்து, படிக்கட்டில் தள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச் சியை ஏற்படுத்தியது. 'அங்கன்வாடி ஊழியரின் அட்டூழியம்' என்ற தவறான தகவலுடன் பரவிய இந்த வீடியோ குறித்து போலீசார் நடத்திய விசாரணை யில், குழந்தையை அடித்தது அங்கன்வாடி ஊழியர் அல்ல, அச்சிறுமியின் தாய் என்ற உண்மை அம்பலமாகியுள்ளது.
அதாவது அங்கன்வாடி மையத்திற்கு அழைத்து வரப்பட்ட அந்த 2 வயது சிறுமி, அமைதியாக உட்காராமல் அடம் பிடித்து அழுதுகொண்டே இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவளது தாய், குழந்தையை காலால் எட்டி உதைத்து தாக்கியுள்ளார். இதில் அந்த சிறுமி நிலைதடுமாறி படிக்கட் டில் இருந்து கீழே விழுந்தாள். அங்கிருந்த நபர் ஒருவர் இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதால், அது தவறான தகவல்களுடன் பரவியது தெரியவந்தது.
இதையடுத்து பெற்றோரை வரவழைத்த போலீசார், குழந்தைகளிடம் இது போன்ற நடந்துகொள்ள கூடாது என்று கவுன்சிலிங் வழங்கி எச்சரித்து அனுப்பினர். தாய் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து மாநில பெண்கள் மற்றும் குழந்தை கள் மேம்பாட்டு துறை மந்திரி அதிதி தட்கரே எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான குழந்தைக ளுக்கு அங்கன்வாடி ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் சேவை செய்து வருகின் றனர். சமூக ஊடகங்களில் உண்மை நிலையை அறியாமல் அவர்கள் மீது அவதூறு பரப்புவது முற்றிலும் தவறானது" என்று கூறி வதந்திகளுக்கு முற் றுப்புள்ளி வைத்துள்ளார்.