இத்தாலியின் துணை பிரதமர் நாளை இந்தியாவுக்கு வருகை

இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இத்தாலியின் துணை பிரதமர் தஜானி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து பேசுகிறார்.
இத்தாலியின் துணை பிரதமர் நாளை இந்தியாவுக்கு வருகை
Published on

புதுடெல்லி,

இத்தாலியின் துணை பிரதமர் மற்றும் வெளிவிவகார துறை மந்திரியான அன்டோனியோ தஜானி இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நாளை அவர் அந்நாட்டில் இருந்து புறப்பட்டு புதுடெல்லிக்கு வருகை தருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்.

இதன்பின்னர், ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் மத்திய வெளிவிவகார துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் ஆகியோரை நேரில் சந்தித்து பேசுகிறார். இதனை மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட ஊடக செய்தி குறிப்பானது உறுதி செய்துள்ளது.

அவருடைய இந்த பயணத்தில், தலைவர்களை சந்தித்து, நாடுகளின் இருதரப்பு உறவுகளை ஊக்குவிப்பதற்காக ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதேபோன்று அவருடைய இந்த பயணத்தில், மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரி பியூஷ் கோயலையும் நேரில் சந்தித்து பேசுகிறார்.

ஜனாதிபதி திரவுபதி முர்முவை நாளை மறுதினம் மதியம் ராஷ்டிரபதி பவனில் சந்தித்து அவர் பேசவுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com