இந்திய மணல் சிற்பக்கலைஞருக்கு இத்தாலியின் உயரிய விருது

இந்திய மணல் சிற்பக்கலைஞருக்கு இத்தாலியின் உயரிய விருது வழங்கப்பட உள்ளது.
இந்திய மணல் சிற்பக்கலைஞருக்கு இத்தாலியின் உயரிய விருது
Published on

புவனேஸ்வர்,

ஒடிசாவை சேர்ந்த பிரபல மணல் சிற்பக்கலைஞர், சுதர்சன் பட்நாயக். ஒடிசாவின் புரி கடற்கரையில் அடிக்கடி விழிப்புணர்வு சார்ந்த மணல் சிற்பங்களை வடித்து நாடு முழுவதும் கவனம் ஈர்த்து வரும் இவர், சர்வதேச அளவிலான மணல் சிற்ப போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகளை பெற்று வருகிறார்.

இவ்வாறு மணல் சிற்பக்கலையில் சாதித்து வரும் சுதர்சன் பட்நாயக்கிற்கு இத்தாலியின் உயரிய கோல்டன் மணல் சிற்பக்கலை விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு வருகிற 13 முதல் 18-ந்தேதி வரை நடைபெறும் சர்வதேச மணல் சிற்ப திருவிழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

இந்த விருதை பெறுவது தொடர்பாக சுதர்சன் பட்நாயக் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் அந்த திருவிழாவில் இந்தியா சார்பில் பங்கேற்பது மிகப்பெரும் கவுரவம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இத்தாலியின் உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் சுதர்சன் பட்நாயக்கிற்கு ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com