‘தேர்வில் தோற்ற குழந்தை ஆசிரியரை குறை சொல்வது போல்...’ - எதிர்க்கட்சிகள் குறித்து ஜே.பி.நட்டா விமர்சனம்

இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல்களை நடத்தும் விதத்திற்காக உலகளவில் பாராட்டப்படுவதாக ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
‘தேர்வில் தோற்ற குழந்தை ஆசிரியரை குறை சொல்வது போல்...’ - எதிர்க்கட்சிகள் குறித்து ஜே.பி.நட்டா விமர்சனம்
Published on: 

ராய்ப்பூர்,

தேர்தல் ஆணையருக்கு எதிராகவும், எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டுகளை கூறி வரும் நிலையில், தேர்வில் தோற்ற குழந்தை ஆசிரியர குறை சொல்வது போல் எதிர்க்கட்சிகள் நடந்து கொள்வதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார். இது தொடர்பாக சத்தீஷ்கார் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;-

“இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல்களை நடத்தும் விதத்திற்காக உலகளவில் பரவலாகப் பாராட்டப்படுவதும், புகழப்படுவதும் மிகுந்த பெருமைக்குரிய விஷயமாகும். இருப்பினும் சிலர் தேர்தல் ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு போன்ற அரசியலமைப்பு நிறுவனங்களை அச்சுறுத்தியும் மிரட்டியும், தங்கள் சுயநலத்திற்காக தீய முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

இவர்கள் நாம் பள்ளி நாட்களில் சந்தித்திருக்கக்கூடிய குழந்தைகளை எனக்கு நினைவூட்டுகிறார்கள். அத்தகைய குழந்தைகள் தேர்வில் தேர்ச்சி பெற்றால், தன்னை ஒரு மேதை என்று கூறிக்கொள்வார்கள். ஆனால் தேர்வில் தோல்வியடைந்தால் ​​ஆசிரியரை குறை சொல்வார்கள்.

இந்த அணுகுமுறையைத்தான் எதிர்க்கட்சிகள் பின்பற்றுகிறார்கள். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒரு தேர்தலில் வெற்றி பெற்றால், தன்னை ஒரு மேதை என்று கருதுவார். ஆனால், மீண்டும் மீண்டும் தோற்கும்போது, ​​தேர்தல் ஆணையத்தின் மீது பழி போடுவார்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X