

புதுடெல்லி,
உலக தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவில் மூன்று நாட்கள் இவாங்கா டிரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஐதராபாத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் பேசிய பேசிய அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா, இந்தியாவில் 13 கோடிக்கும் மேற்பட்டோர் வறுமை நிலையிலிருந்து மீட்கப்பட்டதாக புகழ்ந்து பேசினார்.
இந்நிலையில் இவாங்கா டிரம்ப் பேச்சு குறித்து டுவிட்டரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கூறியதாவது:- இந்தியாவில் வறுமை நிலையிலிருந்து 13 கோடி பேர் மீண்டுள்ளதாக இவாங்கா டிரம்ப் குறிப்பிட்டிருக்கிறார். இது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை மேற்கொண்ட நடவடிக்கையால் எடுக்கப்பட்ட சாதனை. இக்காலகட்டத்தில் சுமார் 14 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்.