ஜம்மு-காஷ்மீர்: அரசு குடியிருப்பில் தீ விபத்து

அரசு குடியிருப்பில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர்: அரசு குடியிருப்பில் தீ விபத்து
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் தலைநகராக ஸ்ரீநகரின் ஜவஹர் நகர் பகுதியில் அரசு குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த அரசு குடியிருப்பில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தால் ஏற்பட்ட தேசங்கள் குறித்த எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கருப்புகை சூழ்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com