ஜாபர் சாதிக் கைது- பிரத்யேக வீடியோ வெளியானது

ஜாபர் சாதிக்கிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜாபர் சாதிக் கைது- பிரத்யேக வீடியோ வெளியானது
Published on

புதுடெல்லி,

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் இன்று கைது செய்யப்பட்டார்.

ஜாபர் சாதிக்கிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜாபர் சாதிக் நியூசிலாந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை சேர்த்த போதைப்பொருள் கும்பலுடன் ஜாபர் சாதிக்கிற்கு தொடர்பு உள்ளது. ஜாபர் சாதிக் கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ சூடோபெட்ரைன் போதைப்பொருளை கடத்தியுள்ளார் . உணவுப் பொருள் என்ற பெயரில் ஆஸ்திரேலியா, மலேசியா, நியூசிலாந்துக்கு போதைப்பொருளை கடத்தியுள்ளார். போதைப்பொருள் கடத்தலில் ஈட்டிய பலகோடி ரூபாய் பணத்தை ஜாபர் சாதிக் சினிமாவில் முதலீடு செய்துள்ளார் என போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை என்.சி.பி அலுவலகத்திற்கு அழைத்து வந்த பிரத்யேக வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com