மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! அகவிலைப்படி உயர்வு

இந்த ஆண்டுக்கான முதல் அகவிலைப்படி கடந்த மார்ச் மாதம் இரண்டு சதவீத உயர்த்தப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! அகவிலைப்படி உயர்வு
Published on

புதுடெல்லி,

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி என்பது வழங்கப்பட்டு வருகிறது. இதனை சுருக்கமாக டிஏ (Dearness Allowance) என்பார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை உயர்த்தி வழங்கப்படும். அதாவது நாட்டில் நிலவும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வைத்து அகவிலைப்படி என்பது மாற்றி அமைக்கப்படும்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான முதல் அகவிலைப்படி கடந்த மார்ச் மாதம் இரண்டு சதவீத உயர்த்தப்பட்டது. அப்போது அகவிலைப்படி அடிப்படைச் சம்பளத்தில் 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக உயர்ந்தது.

இந்த நிலையில், நடப்பாண்டில் 2-வது முறையாக அகவிலைப்படி தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முறை, அகவிலைப்படி 3% அதிகரித்துள்ளது. அதன்படி, அகவிலைப்படி இப்போது 55% இலிருந்து 58% ஆக அதிகரித்துள்ளது. இந்த உயர்வு, பணியில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் இருவருக்கும் பயனளிக்கும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com