கிணற்றில் தவறி விழுந்த ஜெயில் சூப்பிரண்டு உயிரிழப்பு - திருவனந்தபுரத்தில் சோகம்

இதுகுறித்து கரமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிணற்றில் தவறி விழுந்த ஜெயில் சூப்பிரண்டு உயிரிழப்பு - திருவனந்தபுரத்தில் சோகம்
Published on

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரம் குஞ்சாலி மூடு சிறப்பு சப்-ஜெயிலில் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் எம்.சுரேந்திரன் (வயது 55). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டு தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.

அவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததை தொடர்ந்து, அவரது மனைவி அக்கம் பக்கத்தில் தேடினார். இதையடுத்து சுரேந்திரன் கிணற்றில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதனை கண்ட அவரது மனைவி அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். உடனே போலீசாருக்கும், தீயணைப்பு மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து விரைந்து வந்த மீட்பு படையினர் சுரேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கரமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com