

புதுடெல்லி,
ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவிற்கு, மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 14 வருட சிறைத் தண்டனையும், 60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஏற்கெனவே, மாட்டுத்தீவன ஊழல் வழக்குகள் மூன்றில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனைப் பெற்ற லாலு பிரசாத் யாதவ் , மாட்டுத்தீவன ஊழலின் நான்காவது வழக்கான தும்கா கருவூல வழக்கிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டது. நான்கு வழக்குகளையும் சேர்த்து லாலு பிரசாத் யாதவுக்கு ஏறக்குறைய 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த லாலு பிரசாத் யாதாவுக்கு கடந்த மாதம் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு பிரசாத் யாதவ் அனுமதிக்கப்பட்டுள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லாலு பிரசாத் யாதவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, லாலு பிரசாத் யாதவின் உடல் நலம் குறித்து ராகுல் காந்தி விசாரித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.