

ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள நாகர்கர் உயிரியல் பூங்காவில், விலங்குகளை கடும் வெப்பத்திலிருந்து பாதுகாக்க வனத்துறை சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக மூத்த வனவிலங்கு கால்நடை மருத்துவரான டாக்டர் அரவிந்த் மாத்தூர் கூறியதாவது:-
ஜெய்ப்பூரில் தற்போது நிலவும் கடும் வெப்பத்தை கருத்தில் கொண்டு ஜெய்ப்பூர் மாநிலத்தில் உள்ள நகர்கர் உயிரியல் பூங்கா நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பூங்காவில் உள்ள புலிகள், சிறுத்தைகள், சிங்கங்கள் மற்றும் கரடிகள் போன்ற அனைத்து விலங்குகளும், மக்களின் பார்வைக்கு அனுமதிக்கும் முன்பு தினமும் குளிப்பாட்டப்படுகின்றன.
கடும் வெப்பத்தை சமாளிக்கும் வகையில் விலங்குகளின் தங்குமிடங்களில் பெரிய அளவிலான கூலர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் நீர் தெளிப்பான்கள், 'ரெயின் கன்' எனப்படும் மழை துப்பாக்கிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், வனவிலங்குகளின் உணவு முறையிலும் சிறப்பு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.