புல்வமா தாக்குதலுக்காக இலட்சக்கணக்கில் செலவிட்ட ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம்- அதிர்ச்சி தகவல்

ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படை அணி வகுப்பின் மீது தற்கொலைபடை தாக்குதல் நடத்தப்பட்டது.
புல்வமா தாக்குதலுக்காக இலட்சக்கணக்கில் செலவிட்ட ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம்- அதிர்ச்சி தகவல்
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படை அணி வகுப்பின் மீது தற்கொலைபடை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். புல்வாமாவில நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளது.

தாக்கல் செய்யப்பட்ட 13,500 பக்க குற்றப்பத்திரிகையில் 19 பேர் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியதாக சொல்லப்படும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு, இத்தாக்குதலுக்கு 5.7 லட்சம் ரூபாயை செலவு செய்துள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மசூத் அசாரின் மருமகனான மொஹமட் உமர் பாரூக் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டுள்ளாதாக தெரிய வருகின்றது.

குற்றப்பத்திரிகையின் படி, ஜெய்ஷ் பயங்கரவாதிகள் பயன்படுத்திய மாருதி ஈகோ வேனை 1.85 லட்சத்திற்கு வாங்கினர், மேலும் 35,000 டாலர் செலவழித்து வெடிபொருட்களை எடுத்துச் செல்ல அதை மாற்றியமைத்தனர். அனைத்து வகையான வெடிபொருட்களையும் வாங்க ரூ .2.25 லட்சம் செலவிடப்பட்டது, அவை ஆன்லைனில் பெறப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்கு 2018-19-ல் ஜெய்ஷ் பயங்கரவாதிகள் பயன்படுத்திய சில வழித்தடங்களையும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com