

லூதியானா
பள்ளிகளில் கழிப்பறைகளை கட்ட வேண்டும் குறிப்பாக பெண்களுக்கு கட்ட வேண்டும் என்று அவர் தொழிற்துறையினரை அவர் கேட்டுக்கொண்டார்.
முதல் முறையாக மின்சார பல்பையும், கழிவறையையும் கண்டுள்ள கிராமங்கள் உள்ளன. நாங்கள் அனைத்து கிராமங்களுக்கும் 2018 ஆம் ஆண்டிற்குள் மின்சாரத்தை கொடுக்க இலக்கிட்டுள்ளோம். நான் அனைத்து தொழில் நிறுவனங்களையும் தங்களது இலாபத்தில் 2 சதவீதத்தை சமூகப் பணிகளுக்கு செலவழிக்க வேண்டுகிறேன் என்றார்.
சத்யபாரதி பவுண்டேஷன் சார்பில் சமூக நலத் திட்டங்களின் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் கிராமங்களில் கட்டப்பட்ட 17,000 கழிவறைகளின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.
இந்த அமைப்பின் மூலம் அடுத்ததாக 55,000 கழிவறைகளை கிராமங்களில் கட்டும் திட்டமும் இருப்பதாக இந்த அமைப்பின் புரவலர் ராகேஷ் பாரதி மிட்டல் தெரிவித்தார்.