மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கொரோனா தொற்றால் பாதிப்பு

மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கொரோனா தொற்றால் பாதிப்பு
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை. வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்திய அமைச்சர்கள், மாநில முதல் மந்திரிகள், மந்திரிகள் என உயர் பதவியில் உள்ளவர்களும் தப்பவில்லை.

அந்த வகையில்மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மருத்துவமனையில் கஜேந்திர சிங் ஷெகாவத் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- எனக்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் ஆலோசனைப்படி நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த காலங்களில் என்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com