ஜம்மு காஷ்மீர்: என்கவுன்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீர்: என்கவுன்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து, பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அப்பகுதியில், மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனரா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இன்று காலை, பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com