பத்திரிகையாளர் நிதி ரஸ்தானை கரம்பிடித்த ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா

உமர் அப்துல்லாவும், அவரது முதல் மனைவி பாயல் நாத்தும் கடந்த ஜூலை மாதம் விவாகரத்து செய்து கொண்டனர்.
பத்திரிகையாளர் நிதி ரஸ்தானை கரம்பிடித்த ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா
Published on: 

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, பத்திரிகையாளர் நிதி ரஸ்தானை டெல்லியில் திருமணம் செய்துகொண்டார். திருமண புகைப்படங்களை ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள உமர் அப்துல்லா, “ஒரு புதிய பயணம் தொடங்கியது” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

திருமண நிகழ்ச்சி

இந்த திருமண நிகழ்ச்சியில் உமர் அப்துல்லாவின் பெற்றோர்களான பரூக் அப்துல்லா மற்றும் மோலி, அவரது 3 சகோதரிகள் மற்றும் பிற நெருங்கிய உறவினர்கள், அத்துடன் நிதி ரஸ்தானின் பெற்றோர்களான மூத்த பத்திரிகையாளர் எம்.கே.ரஸ்தான் மற்றும் சர்லா ரஸ்தான் ஆகியோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர்.

இரண்டாவது திருமணம்

56 வயதான உமர் அப்துல்லாவுக்கும், அவரது முதல் மனைவி பாயல் நாத்துக்கும் 1994-ம் ஆண்டு திருமணம் ஆன நிலையில், கடந்த ஜூலை மாதம் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இந்நிலையில், முதல் மனைவியை விவாகரத்து செய்து 3 மாதங்களில் நிதி ரஸ்தானை உமர் அப்துல்லா கரம்பிடித்துள்ளார்.

சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமையன்று இவர்களது திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 49 வயதான பத்திரிகையாளர் நிதி ரஸ்தானுக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

X