ஜம்மு காஷ்மீர் மேக வெடிப்பு பெருவெள்ளத்தின் பாதிப்பு அதிக அளவில் உள்ளது - மத்திய மந்திரி தகவல்


ஜம்மு காஷ்மீர் மேக வெடிப்பு பெருவெள்ளத்தின் பாதிப்பு அதிக அளவில் உள்ளது  - மத்திய மந்திரி தகவல்
x

மச்சைல் மாதா யாத்திரை செல்லும் வழி இது நிகழ்ந்திருப்பதால் யாத்ரீகர்கள் பலர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்துவார் மாவட்டம் சோஸ்டியில் மேகவெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது என கிஷ்த்வார் துணை கமிஷனர் பங்கஜ் சர்மா தெரிவித்தார்.

இது தொடர்பாக, மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஜம்மு காஷ்மீர் சோஸ்டி பகுதியில் மேக வெடிப்பு பெருவெள்ளத்தின் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. மேகவெடிப்பு பெருவெள்ளம் அதிகளவிலான உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும்.

நிர்வாகம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. இந்த வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். ஹெலிகாப்டர் மூலம் மீட்புபணிகளை மேற்கொள்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

மச்சைல் மாதா யாத்திரை செல்லும் வழி இது நிகழ்ந்திருப்பதால் யாத்ரீகர்கள் பலர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாம்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நிர்வாகம் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

1 More update

Next Story