ஜம்மு - காஷ்மீரில் 8 கட்டமாக நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

ஜம்மு காஷ்மீரில் 8 கட்டமாக நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரத்து செய்யப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்றது. அதனுடன் சேர்த்து உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

வாக்குச் சாவடிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மதியம் 2 மணி வரை நடைபெற்றது. மொத்தமாக 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் எட்டு கட்டமாக நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு எண்ணப்பட உள்ளன.

தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி), மக்கள் மாநாடு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியை உருவாக்கி முதல் முறையாக தேர்தலை சந்தித்தன. தேசிய கட்சிகளான பா.ஜ.க. மற்றும் காங்கிரசும் களத்தில் போட்டியிட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com