ஸ்ரீநகர் அருகே கரண்நகரில் இன்று சிஆர்பிஎப் முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் அருகே கரண்நகரில் சிஆர்பிஎப் முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். #JammuKashmir
ஸ்ரீநகர் அருகே கரண்நகரில் இன்று சிஆர்பிஎப் முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்
Published on

ஸ்ரீநகர்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் சஞ்சுவான் ராணுவ முகாம் மீது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் வந்து நேற்று முன் தினம் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் ராணுவ வீரர்கள் 6 பேர் வீர மரணம் அடைந்தனர். பொது மக்கள் ஒருவர் உயிரிழந்தார்.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 4 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இதனையடுத்து அங்கு பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனரா? என்பது குறித்து ராணுவ வீரர்கள் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று ஸ்ரீநகர் அருகே கரண்நகரில் சிஆர்பிஎப் முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.23 பி.என். சி.ஆர்.பி.எஃப் எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்து வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com