ஜம்மு காஷ்மீர்;வெடிகுண்டு வீசி தாக்குதல்-பொதுமக்கள் படுகாயம்..!

ஜம்மு காஷ்மீரில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் பொதுமக்கள் படுகாயம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர்;வெடிகுண்டு வீசி தாக்குதல்-பொதுமக்கள் படுகாயம்..!
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்களின் வாகனத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்துள்ளது.

இன்று காலை ஜம்மு காஷ்மீரின் பன்டிபோரா சம்பல் பாலம் பகுதியில் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்த விரிவான தகவல் இன்னும் கிடைக்கப் பெறவில்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com