ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதல் - 11 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 11 பேர் காயம் அடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதல் - 11 பேர் காயம்
Published on

ஜம்மு-காஷ்மீர்,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பாதுகாப்பு படையினர் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 11 பேர் காயமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் பகுதியில் பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பல்லாடியம் அருகே வந்த போது அங்கிருந்த பயங்கரவாதிகள் திடீரென்று கையெறி குண்டுகளை வீசி எதிர்பாராத வகையில் தாக்குதல் நடத்தினர்.

இதில் பாதுகாப்பு படையை சேர்ந்த 3 வீரர்கள், 4 போலீசார் மற்றும் பொதுமக்கள் 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு கூடுதலாக போலீசாரும், பாதுகாப்பு படையினரும் விரைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com