எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்றும் அத்துமீறி தாக்குதல்

எல்லையில் உள்ள பூஞ்ச் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் இன்றும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்றும் அத்துமீறி தாக்குதல்
Published on

பூஞ்ச்,

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. கடந்த மூன்று தினங்களில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் 7-வது அத்துமீறிய தாக்குதல் இதுவாகும். பூஞ்ச் செக்டாரில் உள்ள நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

இந்தியா- பாகிஸ்தான் இடையே 2003 ஆம் ஆண்டு போடப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. கடந்த ஆண்டு பாகிஸ்தான் 2,936 முறை எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருந்தது. கடந்த 15 ஆண்டுகளில் 2018ம் ஆண்டு தான் இவ்வளவு அதிகமாக தாக்குதல் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com