ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்: மாலை 5 மணி வரை 65.48 சதவீத வாக்குகள் பதிவு


தினத்தந்தி 1 Oct 2024 1:43 AM GMT (Updated: 1 Oct 2024 1:41 PM GMT)

ஜம்மு காஷ்மீரில் இன்று இறுதிக் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஸ்ரீநகர்,

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. 90 தொகுதிகள் கொண்ட காஷ்மீரில் 3 கட்டமாக தேர்தல் நடக்கிறது. கடந்த 18-ந் தேதி 24 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் நடந்தது. 61.38 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 25-ந் தேதி 26 தொகுதிகளில் 2-வதுகட்ட தேர்தல் நடந்தது. 57.31 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், 40 சட்டசபை தொகுதிகளில் இன்று 3-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

Live Updates

  • 1 Oct 2024 12:26 PM GMT

    மாலை 5 மணி வரை 65.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    பந்திபூர்-63.33%

    பாரமுல்லா-55.73%

    ஜம்மு-66.79%

    கதுவா - 70.53%

    குப்வாரா-62.76%

    சம்பா-72.41%

    உத்தம்பூர்-72.91%

  • 1 Oct 2024 10:54 AM GMT

    மதியம் 3 மணி நிலவரப்படி 56.01 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி உள்ளன.

    மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு சதவீத விவரம்;

    பந்திப்பூர்: 53.09

    பாராமுல்லா: 46.09

    ஜம்மு: 56.74

    கதுவா: 62.43

    குப்வாரா: 52.98

    சம்பா: 63.24

    உதம்பூர்: 64.43

  • 1 Oct 2024 9:18 AM GMT

    ஜம்மு காஷ்மீரின் 40 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று 3-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது குறித்து மேற்கு பாகிஸ்தான் அகதி ஒருவர் கூறுகையில், "நாங்கள் முதல் முறையாக வாக்களிக்கும் உரிமையை இந்த தேர்தலில் பெற்றுள்ளோம். இதை நாங்கள் கொண்டாடுகிறோம். மேற்கு பாகிஸ்தானிய அகதிகள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இதுவரை தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தியதில்லை. இது பிரதமர் மோடி எங்களுக்கு வழங்கிய பரிசு" என்றார்.

  • 1 Oct 2024 8:51 AM GMT

    மதியம் 1 மணி நிலவரப்படி 44.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு சதவீத விவரம்;

    பந்திப்பூர் - 42.67

    பாரமுல்லா: 36.60

    ஜம்மு: 43.36

    கதுவா: 50.09

    குப்வாரா: 42.08

    சம்பா: 49.73

    உதம்பூர்: 51.66

  • 1 Oct 2024 6:22 AM GMT

    காலை 11 மணி நிலவரப்படி 28.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு சதவீத விவரம்;

    பந்திப்பூர் - 28.04

    பாரமுல்லா: 23.20

    ஜம்மு: 27.15

    கதுவா: 31.78

    குப்வாரா: 27.34

    சம்பா: 31.50

    உதம்பூர்: 33.84 

  • 1 Oct 2024 6:13 AM GMT

    ஜம்மு காஷ்மீரில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஜனநாயகம் திரும்பியுள்ளது என்று மத்திய மந்திரியும் ஜம்மு காஷ்மீர் மாநில பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். 50 ஆண்டுகளில் முதல் முறையாக 5 ஆண்டு கால ஆட்சிக்காக மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். இதற்கு சட்டப்பிரிவு 370-ரத்து செய்யப்பட்டதே காரணம். குடும்ப ஆட்சியை மக்கள் விரட்டியடிக்க உள்ளார்கள்” என்றார்.

  • 1 Oct 2024 5:18 AM GMT

    ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலின் மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 11.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

  • 1 Oct 2024 5:12 AM GMT

    ஜம்மு காஷ்மீர்: இன்று 3-வது மற்றும் இறுதிக்கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.




Next Story