ஜம்முவில் ஓராண்டு மேல் வசிப்பவர்களுக்கு வாக்களிக்க உரிமை அளிக்கும் சட்டம் வாபஸ்

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 கோப்புப் படம் (பிடிஐ)
கோப்புப் படம் (பிடிஐ)
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் அங்கு படிப்படியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கான சிறப்பு நடவடிக்கை கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கியது.

புதிய வாக்காளர்களைப் பதிவு செய்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், உள்ளிட்ட பணிகள் நடந்தன.ஓராண்டுக்கு முன்பு ஜம்முவுக்கு இடம்பெயர்ந்தவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு உரிய ஆவணம் தங்களிடம் இல்லை என்றும், இதனால் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியாத நிலை இருப்பதாகவும் அதிகாரிகளிடம் முறையிட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஜம்மு துணை ஆணையருமான அவ்னி லவாசா கடந்த 11 ஆம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், ஜம்முவில் ஓராண்டுக்கும் மேலாக வசிப்பவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்துகொள்வதற்குத் தேவையான வசிப்பிடச் சான்றிதழ் அளிக்கும் அதிகாரம் வருவாய் அதிகாரிகளுக்கு வழங்கப்படுவதாக உத்தரவிடப்பட்டிருந்தது.

இதற்கு பாரதிய ஜனதா கட்சி மட்டுமே ஆதரவு தெரிவித்தது. பிற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, இந்த உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக ஜம்மு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com