பா.ஜனதா சார்பில் ‘ஜன் ஆசிர்வாத்’ ரத யாத்திரை; இன்று தொடங்குகிறது

மராட்டியத்தில் பா.ஜனதா கட்சி தங்களை பலப்படுத்திக்கொள்ள தீவிரமாக உழைத்து வருகிறது.
பா.ஜனதா சார்பில் ‘ஜன் ஆசிர்வாத்’ ரத யாத்திரை; இன்று தொடங்குகிறது
Published on

அவுரங்காபாத்,

மராட்டியத்தில் பா.ஜனதா கட்சி தங்களை பலப்படுத்திக்கொள்ள தீவிரமாக உழைத்து வருகிறது. இந்த வகையில் மரத்வாடா மண்டலத்தில் ஜன் ஆசிர்வாத் என்ற பெயரில் யாத்திரையை தொடங்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.

அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 21-ந் தேதி வரை இந்த யாத்திரை நடைபெற உள்ளது. மரத்வாடா மண்டலத்தில் உள்ள 6 மாவட்டங்களில் 650 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் இந்த யாத்திரை பா.ஜனதா தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள், மக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள உதவும். பார்லியில் இன்று தொடங்கும் யாத்திரை கங்ககெட், நாந்தெட், பர்பானி, செலு, ஜல்னா மற்றும் அவுரங்காபாத் ஆகிய பகுதிகளுக்கு செல்கிறது.

இந்த ஜன் ஆசிர்வாத் யாத்திரையில் பா.ஜனதாவின் மத்திய மந்திரிகள் ராவ்சாகேப் தன்வே மற்றும் பக்வத் காரத் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com