ஜனவரி 12: தேசிய இளைஞர் தினம்

இன்று (ஜனவரி 12) இந்தியாவில் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஜனவரி 12: தேசிய இளைஞர் தினம்
Published on

புதுடெல்லி,

நரேந்திரநாத் தத்தா என்ற இயற்பெயர் கொண்ட சுவாமி விவேகானந்தர் 1863-ம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தார். இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவரான சுவாமி விவேகானந்தர் இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடராவார். இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் இவர் நிகழ்த்திய வேதாந்த தத்துவங்களை அடிப்படையாக கொண்ட சொற்பொழிவுகள் சிறப்பானவை.

அதிலும் குறிப்பாக 1893-ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலகச் சமயங்களின் பாராளுமன்ற நிகழ்ச்சியில் விவேகானந்தர் நிகழ்த்திய சொற்பொழிவு உலகப்புகழ் பெற்றது.

விவேகானந்தரின் பிறந்தநாளை இந்திய அரசாங்கம் 1984-ம் ஆண்டு தேசிய இளைஞர் தினமாக அறிவித்தது. அதன்படி 1985-ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஜனவரி 12-ந்தேதி தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருளாக விவேகானந்தரின் முக்கிய போதனைகளில் ஒன்றான 'எல்லாமே மனதில் உள்ளது' என்ற வாசகம் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com