கேரள கவர்னருடன், ஜப்பான் தூதர் சந்திப்பு

கேரள மாநில கவர்னர் சதாசிவம், இந்தியாவுக்கான ஜப்பான் தூதருக்கு அழைப்பு விடுத்தார்.
கேரள கவர்னருடன், ஜப்பான் தூதர் சந்திப்பு
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநில கவர்னர் சதாசிவம், இந்தியாவுக்கான ஜப்பான் தூதருக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி தூதர் கேஞ்சி ஹிராமட்சூ தன்னுடைய மனைவி பேட்ரிகா கிளாரா அகுடா ஹிராமட்சூவுடன் கவர்னர் மாளிகையில், கவர்னர் சதாசிவத்தை நேற்று சந்தித்து பேசினார். அவர்களை கவர்னரின் மனைவி சரஸ்வதி வரவேற்றார்.

இந்த சந்திப்பின் போது கேரள மாநில பல்கலைக்கழகங்களில் ஜப்பான் மொழியை பாடமாக வைக்க ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் கேரள சுற்றுலா துறையை மேம்படுத்த ஜப்பானியர்கள் அதிக அளவில் சுற்றுலா வருவதற்கு ஊக்குவிக்க வேண்டும் என்று கவர்னர் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக கேரள முதல்மந்திரியை சந்தித்து பேசுமாறும் ஜப்பான் தூதருக்கு, கவர்னர் சதாசிவம் பரிந்துரை செய்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com