ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி அடுத்த மாதம் இந்தியா வருகை

இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் சனே தகாய்ச்சி பங்கேற்பார் என கூறப்பட்டது.
ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி அடுத்த மாதம் இந்தியா வருகை
Published on

புதுடெல்லி,

ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி ஜூலை முதல் வாரத்தில் இந்தியா வர உள்ளார். முதலில் புதுடெல்லிக்கு வருகை தரும் அவர், பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

அதன் பின்னர் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறவுள்ள இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் சனே தகாய்ச்சி பங்கேற்பார் என கூறப்பட்டது. ஆனால் ஜப்பான் நாடாளுமன்ற கூட்டம், உள்நாட்டு பணிகள் காரணமாக போதிய கால அவகாசம் இல்லாததால், அவர் கவுகாத்தி பயணத்தை ரத்துசெய்வார் என கூறப்படுகிறது. பிரதமர் தகாய்ச்சி பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com