மாநகராட்சிக்கு வரி கட்டாததால் ஜெயலலிதா வீட்டுக்கு சீல்

இந்த வீட்டிற்கு 2017ம் ஆண்டு முதல் வரி செலுத்தவில்லை என மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
மாநகராட்சிக்கு வரி கட்டாததால் ஜெயலலிதா வீட்டுக்கு சீல்
Published on

ஐதராபாத்,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக ஐதராபாத்தில் உள்ள யாசப் குடா பகுதியில் பங்களா ஒன்று உள்ளது. இந்த வீட்டுக்கு பல ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தப்படாமல் இருந்துள்ளதாக தெரிகிறது. இதை தொடர்ந்து ஐதராபாத் மாநகராட்சி சார்பில் இன்று ஜெயலலிதாவின் வீட்டுக்கு சீல் வைத்துள்ளனர்.

ரூ.1.60 கோடி அளவுக்கு சொத்து வரி நிலுவையில் இருந்து வந்தநிலையில் அது தொடர்பாக பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், வரி கட்டப்படாமல் இருந்துள்ளது. இதை தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்தினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த வீட்டிற்கு 2017ம் ஆண்டு முதல் வரி செலுத்தவில்லை என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி பாக்கி தொடர்பாக ஜெயலலிதா உறவினர்களுக்கு ஐதராபாத் மாநகராட்சி ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியது, நோட்டீஸ் அனுப்பிய பின்னும் வரி செலுத்தாத‌தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com