

புதுடெல்லி
நேற்று முதல்வர் நிதிஷ் குமார் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷாவை சந்தித்தப்போது முறையான அழைப்பு விடுக்கப்பட்டதாக அமித் ஷா கூறினார். இதைத் தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர்பாளர் கே சி தியாகி பட்னாவில் பேசுகையில் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் கூடிப்பேசி கூட்டத்தில் ஒப்புதல் பெற்று முறையாக அறிவிக்கும் என்றார்.
அடுத்தமுறை மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் போது ஐக்கிய ஜனதாதளமும் அதில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் பிகாரில் இணைந்து அரசமைத்துள்ளபோது, மத்திய அரசிலும் பங்கேற்பது இயல்பானதுதானே என்று கூறினார் தியாகி.