ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக நிதிஷ் குமார் போட்டியின்றி தேர்வு

இதுவரை, தற்போது தலைவராக பதவி வகிக்கும் நிதிஷ் குமார் ஒருவரே வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.

ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக நிதிஷ் குமார் போட்டியின்றி தேர்வு
Published on

புதுடெல்லி

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக நிதிஷ் குமார் செயல்பட்டு வருகிறார். அவர் மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிட முடிவு செய்துள்ளார். இதனால், முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறார்.

இந்த சூழலில், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக நிதிஷ் குமார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான அனில் ஹெக்டே செய்தியாளர்களிடம் இன்று பேசினார்.

Also Read
நாடு முழுவதும் 170 பேர் போலீஸ் காவலில் மரணம்: அதிர்ச்சி தகவல் வெளியீடு

ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக நிதிஷ் குமார் போட்டியின்றி தேர்வு

அவர் பேசும்போது, தலைவர் பதவிக்கான வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் மார்ச் 22 ஆகும். 23-ந்தேதி வேட்பு மனு பரிசீலனை நடந்தது. இன்று காலை 11 மணிவரை வேட்பு மனு வாபஸ் பெறப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுவரை, தற்போது தலைவராக பதவி வகிக்கும் நிதிஷ் குமார் ஒருவரே வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். அவரை கட்சியின் தேசிய தலைவராக நான் அறிவிக்கிறேன் என்றார்.

இதனால், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக நிதிஷ் குமார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். 32 ஆண்டுகளாக கட்சியை தன்னுடைய கடின உழைப்பாலும், அர்ப்பணிப்பு உணர்வாலும் நிதிஷ் குமார் கட்டியமைத்து இருக்கிறார் என அவரை அக்கட்சியின் செயல் தலைவர் சஞ்சய் ஜா பாராட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com