ஜே.இ.இ. முதன்மை தேர்வு ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்குகிறது - தேசிய தேர்வு முகமை

ஜே.இ.இ. தேர்வு தொடர்பான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை(என்.டி.ஏ.) வெளியிட்டு இருக்கிறது.
ஜே.இ.இ. முதன்மை தேர்வு ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்குகிறது - தேசிய தேர்வு முகமை
Published on

சென்னை,

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. ஏற்கனவே 4 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், 2022-23-ம் ஆண்டில் இருந்து 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஜே.இ.இ. தேர்வு தொடர்பான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை(என்.டி.ஏ.) வெளியிட்டு இருக்கிறது. இதில் ஜே.இ.இ. முதற்கட்ட தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் 16, 17, 18, 19, 20, 21 ஆகிய நாட்களில் நடத்துகிறது. 2-ம் கட்ட தேர்வு மே மாதம் 24. 25, 26, 27, 28, 29-ந்தேதிகளில் நடக்கிறது. முதற்கட்ட தேர்வை எழுத விருப்பமுள்ளவர்கள் வருகிற 31-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com