36 பேருக்கு ஜீவன் ரக்‌ஷா பதக்கம் தமிழகத்தை சேர்ந்தவர் தேர்வு

மனிதாபிமான முறையில் செயல்பட்டு மனித உயிர்களை காப்பாற்றுபவர்களுக்கு ஜீவன் ரக்‌ஷா பதக்கம் மத்திய அரசால் வழங்கப்படும்.
36 பேருக்கு ஜீவன் ரக்‌ஷா பதக்கம் தமிழகத்தை சேர்ந்தவர் தேர்வு
Published on

புதுடெல்லி,

மனிதாபிமான முறையில் செயல்பட்டு மனித உயிர்களை காப்பாற்றுபவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஜீவன் ரக்ஷா பதக்கம் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் வழங்கப்படும். இந்த பதக்கம் சர்வோட்டம் ஜீவன் ரக்ஷா, உத்தம் ஜீவன் ரக்ஷா, ஜீவன் ரக்ஷா என 3 வகைகளாக பிரிக்கப்பட்டு அளிக்கப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு நாடு முழுவதும் அனைவரும் பாராட்டும் வகையில் மனிதாபமான முறையில் மனித உயிர்களை காத்த 36 பேர் ஜீவன் ரக்ஷா பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த விருதுக்கு அதிகபட்சமாக உத்தரபிரதேசம், கேரளாவில் இருந்து தலா 5 பேர் தேர்வாகி இருக்கின்றனர்.

ஜீவன் ரக்ஷா பதக்கம் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த பங்கஜ் குமார் பாண்டே தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதக்கத்துடன், உள்துறை மந்திரி கையெழுத்திட்ட சான்றிதழும் வழங்கப்படும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com