குஜராத்தில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி கைது

இந்திய விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது தெரியவந்தது.
குஜராத்தில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி கைது
Published on: 

ஆமதாபாத்,

குஜராத்தில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த ஒரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டார். அவர் இந்திய விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்து தெரியவந்தது.

பயங்கரவாதி கைது

குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் ஜரோட் பஸ் நிலையம் அருகே பயங்கரவாத எதிர்ப்பு படையினரும், போலீசாரும் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். வாகனம் ஒன்றை சோதனை நடத்தியதில் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்புடன் தொடர்புடையவர் என கூறப்படும் அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் பகுதியை சேர்ந்த முகமது சஹருல் இஸ்லாம் கபிருதீன் என்பவரை கைது செய்தனர்.

தாக்குதல் நடத்த திட்டம்

சோதனையின்போது, காரில் இருந்து ஒரு ஏ.கே. 47 ரக துப்பாக்கி, 23 தோட்டாக்கள், வெடிமருந்துகள், ஜெய்ஷ் இ முகமது கொடிகளை அதிகாரிகள் கண்டெடுத்தனர். விசாரணையில் அவர் வதோதரா நகரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது தெரியவந்தது. இதன் மூலம் மிகப்பெரிய சதி முறியடிக்கப்பட்டது.

X