அடுத்த ஆண்டு முதல் மீண்டும் விமான சேவையை துவங்குகிறது ஜெட் ஏர்வேஸ்

ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் தனது சேவையை தொடங்க உள்ளது.
அடுத்த ஆண்டு முதல் மீண்டும் விமான சேவையை துவங்குகிறது ஜெட் ஏர்வேஸ்
Published on

புதுடெல்லி,

கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமையால் 2019-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் தனது சேவையை நிறுத்தியது ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம். ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த ஜெட் ஏர்வேஸ் கொஞ்சம் கொஞ்சமாகத் தனது சந்தை மதிப்பை இழந்து விமான சேவையில் இருந்து வெளியேறியது.

இந்த நிலையில், ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் தனது சேவையை தொடங்க உள்ளது. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு முதல் உள்நாட்டு விமான சேவையை தொடங்க ஜெட் ஏர்வேஸ் தயாராகி வருகிறது.

முதல் விமானமாக டெல்லி - மும்பை இடையே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்கள் அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு முதல் இயக்கப்படும் என்று விமானம் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com