கோழிக்கோடு அருகே நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை வங்காளதேச வாலிபர் கைது

கோழிக்கோடு அருகே நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை வங்காளதேச வாலிபர் கைது செய்தனர்.
கோழிக்கோடு அருகே நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை வங்காளதேச வாலிபர் கைது
Published on

கோழிக்கோடு,

கோழிக்கோடு அருகே உள்ள ஓமேச்சேரியில் பிரபல நகைக்கடையில், நேற்று முன்தினம் இரவு கடை ஊழியர்கள் கதவை மூடிவிட்டு நகையை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென்று முகமூடி அணிந்த 3 வாலிபர்கள் கதவை திறந்து கொண்டு உள்ளே புகுந்தனர். பின்னர் துப்பாக்கி முனையில் கடை ஊழியர்களை மிரட்டி கடையில் 12 பவுன் வளையல் வைக்கப்பட்டு இருந்த பெட்டியை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினர்.

இதில் ஒருவர் கால்இடறி கீழே விழுந்தார். மற்ற 2 பேரும் அங்கிருந்து 12 பவுன் நகையுடன் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட கொள்ளையனை கடை ஊழியர்கள் கடுமையாக தாக்கினர். பின்னர் அவர் கொடுவள்ளி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கடை ஊழியர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த கொள்ளையனை போலீசார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். விசாரணையில் அவர், வங்காளதேசத்தை சேர்ந்த ரகீம் (வயது 31) என்பதும், திருட்டுத்தனமாக இந்தியாவுக்குள் நுழைந்த இவர்கள் கேரளாவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.

இதுகுறித்து கொடுவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகீமை கைது செய்தனர். தப்பி ஓடிய மற்ற 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com