மங்களூரு அருகே கிணற்றில் குதித்து நகைக்கடை உரிமையாளர் தற்கொலை

மங்களூரு அருகே கிணற்றில் குதித்து நகைக்கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
மங்களூரு அருகே கிணற்றில் குதித்து நகைக்கடை உரிமையாளர் தற்கொலை
Published on

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை அடுத்த கின்னிகோலி போலீஸ் எல்லைக்குட்பட்ட ராம்நகரை சேர்ந்தவர் உமேஷ் ஆச்சாரியா (வயது 62). இவர் கின்னிகோலியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இதற்கு முன்பு இவர் கின்னிகோலி ரேட்டரில் கிளப்பின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். தற்போது அந்த பொறுப்பில் இருந்து விலகி இவர், நகைக்கடையை கவனித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கின்னிகோலி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உமேஷின் உடலை கைப்பற்றி மங்களூரு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

வாழ்வில் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com