ஜார்க்கண்ட்: 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரக் கொலை - முட்புதரில் உடல் கண்டெடுப்பு

சடலமாக கண்டெடுக்கப்பட்ட மாணவியின் உடலில் கொடூர காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜார்க்கண்ட்: 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரக் கொலை - முட்புதரில் உடல் கண்டெடுப்பு
Published on: 

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் தனது உறவினர் வீட்டுக்கு சென்ற சிறுமி, வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

போலீசில் புகார்

அதையடுத்து சிறுமியை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால் சிறுமியைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காத நிலையில், தங்கள் மகளை காணவில்லை என்று ராஞ்சி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

சடலமாக கண்டெடுப்பு

இந்த நிலையில் மாணவியின் வீட்டில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் காட்டுப்பகுதியில் முட்புதரில் மாணவி சடலமாக கிடந்தார். இதுபற்றி அப்பகுதி மக்கள் ராஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பாலியல் வன்கொடுமை

மாணவியின் உடலில் கொடூர காயங்கள் இருந்தன. மேலும் மாணவியின் கழுத்தை நெரித்து கொலை செய்திருந்தது தெரியவந்தது. யாரோ மர்ம நபர்கள் மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்றும், அவர்கள் மாணவியின் கழுத்தை நெரித்து கொன்று உடலை முட்புதரில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கான தடயங்களையும் போலீசார் கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கொலையாளிகளையும் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் ராஞ்சியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com