ஜார்கண்ட்: கனமழைக்கு 5 பேர் பலி; ஒருவர் மாயம்

வீட்டு சுவர் ஒன்று இன்று காலை இடிந்து விழுந்ததில் 5 வயது சிறுவன் பலியானான். 3 பேர் காயமடைந்தனர்.
ஜார்கண்ட்: கனமழைக்கு 5 பேர் பலி; ஒருவர் மாயம்
Published on

ராஞ்சி,

ஜார்கண்டில் செராய்கேளா-கர்சவான் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதில், பல்வேறு இடங்களில் குடியிருப்புகள், வீடுகள் மற்றும் கட்டிடங்களை சுற்றி வெள்ளநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், தண்டு கிராமத்தில் ராஜ்நகர் பகுதியில், சந்தோஷ் லோகர் என்பவர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் உள்பட சிலர் வந்துள்ளனர். அப்போது வீடு மழையால் சேதமடைந்து திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் 8 பேர் காயமடைந்தனர்.

இதேபோன்று இதே மாவட்டத்தில் வீட்டு சுவர் ஒன்று இன்று காலை இடிந்து விழுந்ததில் 5 வயது சிறுவன் பலியானான். 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

செராய்கேளா-கர்சவான் மாவட்டத்தில் வீடு இடிந்து விழுந்ததில் பெண் மற்றும் அவருடைய 7 வயது மகன் உயிரிழந்தனர். சத்ரா மாவட்டத்தில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் தம்பதி நீரில் அடித்து செல்லப்பட்டனர். ஜார்கண்டில் மொத்தத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கனமழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com