ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்

முதல் மந்திரிக்கு, எந்த பண மோசடி வழக்கில் விளக்கம் அளிக்க கேட்கப்பட்டு உள்ளது என்பது பற்றி உடனடியாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்
Published on

புதுடெல்லி, 

ஜார்கண்ட் மாநிலத்தில் ஹேமந்ந் சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் முதல்மந்திரி ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சார்பில் மோசடி வழக்கு ஒன்றில் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அவர் அடுத்த வாரம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல் மந்திரிக்கு, எந்த பண மோசடி வழக்கில் விளக்கம் அளிக்க கேட்கப்பட்டு உள்ளது என்பது பற்றி உடனடியாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர், சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டிய வழக்கில் சமீபத்தில் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அதன் தொடர்ச்சியாக முதல்-மந்திரிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com