ஜார்கண்ட் கல்வி மந்திரி உடல்நல குறைவால் காலமானார்

ஜார்கண்ட் கல்வி மந்திரி மறைவை ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜார்கண்ட் கல்வி மந்திரி உடல்நல குறைவால் காலமானார்
Published on

டேராடூன்,

ஜார்கண்ட் மாநிலத்தின் பள்ளி கல்வி மந்திரியாக பதவி வகித்து வந்தவர் ராம்தாஸ் சோரன். சமீபத்தில் கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதற்காக டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும், அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்றிரவு காலமானார். அவருடைய மறைவை ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் உறுதிப்படுத்தி உள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், இதுபோன்று எங்களை விட்டு விட்டு நீங்கள் இப்படி சென்றிருக்க கூடாது என பதிவிட்டு உள்ளார். ராம்தாஸ் சோரனின் மகன் சோமேஷ் சோரனும் இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளார். மறைந்த சோரன், கத்சிலா தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எளிமை மற்றும் பொதுமக்கள் சேவைக்காக அறியப்பட்டவர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com