

ராஞ்சி,
ஜார்கண்ட் மாநிலத்தில், தற்போது, பா.ஜனதா ஆட்சி நடைபெறுகிறது. ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்கண்ட் சட்டசபைக்கு 5 கட்டங்களாகத் தேதல் நடைபெறுகிறது. இதில் 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில், 16 தொகுதிகளுக்கான 5-வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்றது. 5 தொகுதிகளில் மதியம் 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மற்ற 11 தொகுதிகளில் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
பலத்த பாதுகாப்புடன் நடந்த ஐந்தாம் கட்ட தேர்தலில் 70.83 சதவிகித வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 5 கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் 23ம் தேதி எண்ணப்படுகின்றன.
இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணி, ஆட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.