60 மாணவிகள்...! 17 கிலோமீட்டர்..! நள்ளிரவில் நடந்து சென்று 'வார்டன்' மீது புகார்

60க்கும் மேற்பட்ட மாணவிகள் 17 கி.மீ., துரம் நள்ளிரவில் நடந்து சென்று துணை ஆணையரிடம் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
file photo
file photo
Published on

சைபாசா:

ஜார்க்கண்டில், முதல் மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது .இங்கு, மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் குண்ட்பானியில் கஸ்துர்பா காந்தி உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது.

இதன் ஹாஸ்டலில், மாணவியருக்கு பழைய உணவு அளிப்பது, கழிப்பறையை சுத்தம் செய்யச் சொல்வது,கடும் குளிரிலும் தரையில் படுக்க வைப்பது போன்ற செயல்களில் வார்டன் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத பிளஸ் 1 வகுப்பு படிக்கும் 60க்கும் மேற்பட்ட மாணவியர்,வார்டன் மீது புகார் தர, திடீரென மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர்.

ஆட்சியர் அலுவலகத்தை அடைந்து, தங்களுடைய விடுதியின் அட்டூழியங்கள் குறித்து துணை ஆணையரிடம் புகார் அளித்தனர். காவலாளி.

நள்ளிரவு நேரத்தில் 17 கி.மீ., நடந்து சென்ற அவர்கள், நேற்று காலை 7:00 மணியளவில் அங்கு சென்றனர்.அங்கிருந்த துணை ஆணையர் அனன்யா மிட்டலை சந்தித்த மாணவியர், ஹாஸ்டல் வார்டன் மீது புகார் அளித்தனர்.

உடனே, அவர் மாவட்ட கல்வி அதிகாரியை அழைத்து, வார்டன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மாணவிகளின் இந்த செயல் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. துணை ஆணையர் உத்தரவின் பேரில், மாவட்ட கல்வி கண்காணிப்பாளர் (டிஎஸ்இ) அபய் குமார் ஷில் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களை வாகனங்களில் பள்ளிக்கு திருப்பி அனுப்பினார்.இதுகுறித்து விசாரணை நடத்தி வார்டன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுமிகளிடம் உறுதியளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com