ஜார்கண்ட்: பறவை மோதியதால் அவரமாக தறையிறக்கப்பட்ட விமானம்

கழுகு மோதியதால் விமானத்தின் முன் பகுதி சிறிது சேதம் அடைந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராஞ்சி,
பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து கொல்கத்தாவுக்கு இண்டிகோ விமானம் சென்றுகொண்டிருந்தது. விமானத்தில் சுமார் 175 பயணிகள் பயணம் செய்தனர். ராஞ்சி அருகே விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விமானத்தின் மீது பறவை மோதியது.
இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் உடனடியாக ராஞ்சியின் பிர்சா முண்டா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கழுகு மோதியதால் விமானத்தின் முன் பகுதி சிறிது சேதம் அடைந்தது என்றும் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






