ஜார்கண்ட்: நக்சல் ஒழிப்பு பணியில் மரணம் அடைந்த வீரர் குடும்பத்துக்கு ரூ.1.2 கோடி இழப்பீடு

நக்சல் ஒழிப்பு பணியில் ஈடுபட்ட வீரர் சுனில் தான் என்பவர் பணியின்போது, மரணம் அடைந்துள்ளார்.
ராஞ்சி,
ஜார்கண்டில் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், ஜார்கண்ட் மற்றும் அண்டை மாநிலங்களில் ஒன்றான சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜார்கண்டில் நக்சல் ஒழிப்பு பணியில் ஈடுபட்ட வீரர் சுனில் தான் என்பவர் பணியின்போது, மரணம் அடைந்துள்ளார்.
அவருடைய குடும்பத்தினரை, முதல்-மந்திரி சோரன் இன்று நேரில் அழைத்து, பேசி ஆறுதல் கூறினார். இந்த கூட்டத்தில் காவல் துறையினர் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன்பின்னர், அவர்களுடைய குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.1.2 கோடி மதிப்பிலான காசோலையை வழங்கினார்.
Related Tags :
Next Story






