ஜார்க்கண்ட்டில் பயங்கரம்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்

சிறுமியும் அந்த இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.
ஜார்க்கண்ட்டில் பயங்கரம்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்
Published on: 

ராஞ்சி,

ஜார்க்கண்ட்டில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சிறுமி மாயம்

ஜார்க்கண்ட் மாநிலம் சிம்டிகா மாவட்டம் கிர்சாய் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 24ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். சிறுமியை எங்கு தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர்.

சடலமாக மீட்பு

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தேடுதலில் கிராமத்திற்கு அருகே பாயும் கிர்மா ஆற்றின் கரையோரம் சிறுமி சடலமாக கிடந்ததை போலீசார் நேற்று கண்டுபிடித்தனர்.

இளைஞரிடம் விசாரணை

இதையடுத்து, சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், அதேகிராமத்தை சேர்ந்த 19 வயது இளைஞரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை

சிறுமியும் அந்த இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். அதேவேளை, சிறுமி வேறொரு இளைஞருடன் பழகுவதாக காதலனுக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனால் கடந்த 24ம் தேதி சிறுமியை இளைஞர் கிராமத்திற்கு அருகே உள்ள ஆற்றுப்பகுதிக்கு தனியே அழைத்துள்ளார். அங்கு சென்ற சிறுமியிடம் இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் உடலை ஆற்றுக்கரை அருகே மண்ணில் புதைக்க முயற்சித்துள்ளார். ஆனால், சிறுமியின் உடலை முழுமையாக புதைக்க முடியாததால் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனை தொடர்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட இளைஞரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

X