ஜியோ செல்போன் கட்டணம் உயர்வு: ஜூலை 3-ந் தேதி முதல் அமல்

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
செல்போன் கட்டணம் உயர்வு
Published on

புதுடெல்லி,

ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம், தனது செல்போன் சேவையில் அனைத்து ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தையும் உயர்த்துகிறது. 12 சதவீதம் முதல் 27 சதவீதம்வரை கட்டணம் உயர்கிறது. ஜூலை 3-ந் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், 5ஜி சேவையில் அளவற்ற இலவச 5ஜி சேவைகளை பெறுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு, முதல்முறையாக செல்போன் சேவை கட்டணங்களை ஜியோ உயர்த்துகிறது. 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com