ஸ்டார்ட் அப் இந்தியா நடவடிக்கையை தொடக்கத்திலேயே நிறுவனங்களுடன் இணைக்க வேண்டும் - மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்

குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் மத்திய-மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அந்நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கலந்து கொண்டு உரையாற்றினார்.
ஸ்டார்ட் அப் இந்தியா நடவடிக்கையை தொடக்கத்திலேயே நிறுவனங்களுடன் இணைக்க வேண்டும் - மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்
Published on

அகமதாபாத்:

குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் மத்திய-மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அந்த நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியதாவது,

ஸ்டார்ட் அப் இந்தியா நடவடிக்கையை தொடக்கத்திலேயே நிறுவனங்களுடன் இணைத்து சமமான பங்குதாரராக கொண்டு செயல்பட்டால் தான் நிலையான வளர்ச்சி அடைய முடியும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு 300 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப்களில் இருந்து சுதந்திரத்தின் 75 வது ஆண்டில் இந்தியா இப்போது 75,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப்களைக் கொண்டுள்ளது. ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பிலும் ண்ணிக்கையிலும் இந்தியா உலகளவில் 3வது இடத்தில் உள்ளது.

ஆராய்ச்சி , ஸ்டார்ட்அப் இந்தியா நடவடிக்கை, பாடத்திட்டங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் போன்றவற்றை ஒருங்கிணைத்தால் தான் இளம் புத்தாக்க சிந்தனை கொண்டவர்களை ஈர்க்க முடியும் என்றும் அவர்கள் மூலமே புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய பொருட்களை தயாரித்து உலகிற்கு சவால் விட முடியும் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com